ETV Bharat / state

கரோனா மூன்றாம் அலையை வெல்வது எப்படி? - மருத்துவர் விளக்கம் - Dr.K.Kulanthai Samy on covid 19

கரோனா தொற்று பரவலின் வியூகங்களைப் புரிந்து கொண்டு, ஒன்றிணைந்து செயல்பட்டால் விரைவில் நோய்த்தொற்றை வெல்லலாம் என முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநரும், மருத்துவருமான க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் விளக்கம்
மருத்துவர் விளக்கம்
author img

By

Published : Jun 25, 2021, 2:11 PM IST

சென்னை: கரோனா தொற்றின் முதல் அலையின்போது பெரும்பாலும் நடுவயதினர், வயதானவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

இந்நிலையில் மூன்றாம் அலை குறித்தும், அதைத் தடுப்பது குறித்தும் முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநரும், மருத்துவருமான க.குழந்தைசாமியிடம் கேட்டோம்.

கொள்ளை நோய்களின் வரலாறு சொல்வது என்ன?

  • இன்ஃபுளுயன்சா போன்ற கொள்ளை நோய்கள் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பெருநகரங்களிலும், அதில் தொடர்பு கொண்டிருந்த சிறுநகரங்களிலும் முதல் அலையாக பரவியது. ஊரடங்கு அமல்படுத்தி, கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தியபோது முதல் அலை கட்டுக்குள் வந்தது.
  • ஸ்பானிஷ் ஃபுளூ போன்ற இன்ஃபுளுயன்சா கொள்ளை நோய்கள் பரவிய 1918 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் சர்வதேச பயணங்கள் தற்போது போல எளிமையாக இல்லை. முதலாம் உலகப்போர் காரணமாக, படைவீரர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்ததே, ஸ்பானிஷ் ஃபுளூ உலகம் முழுவதும் பரவ வழிசெய்தது. அப்போது ஸ்பானிஷ் ஃபுளூவிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்படவில்லை.
    மருத்துவமனை
    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்கள்
  • உலகின் பல நாடுகளுக்கும் பரவிய இந்நோய், சமூக கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, தானாகவே கட்டுக்குள் வந்தது. பயணங்கள் மேற்கொள்ளப்படாத பல தீவுகளும், தொலைதூரக் கிராமங்களும், மலைக் கிராமங்களும் தொற்றே ஏற்படாமல் தப்பித்தன. பயணங்கள் தொற்று பரவுதலில் முக்கியக் காரணியாக செயல்படுகின்றன.

இரண்டாவது அலையில் தொற்று அதிகம் பரவ காரணம்?

  • கரோனா தொற்றின் முதல் அலை ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாட்டின் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. எல்லா இடங்களிலும் கரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
  • காற்றோட்ட வசதி இல்லாத கட்டடங்களில் ஜன்னல், கதவுகள் உரிய முறையில் திறந்துவைக்கப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் இதுபோல், தனி மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் தாய் சேய் நல மையங்கள், தனித்தொற்று நோய் மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவமனைகள் என தனித்தனியாக செயல்படவில்லை. இதனால் மருத்துவமனைகளே நோய் பரவும் மையங்களாக மாறின.
  • முதல் அலையில் பெரும்பாலும் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. தற்போது, இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இளையோருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மூன்றாவது அலை வரும் வாய்ப்பு உள்ளதா?

ஊரடங்கின் மூலமாக மட்டுமே தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. தடுப்பூசி மிகக் குறைவான விழுக்காடு மக்களுக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதனால் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளது.

கரோனா சிகிச்சை
கரோனா சிகிச்சை

பெரு நகரங்களில் இதுவரை தொற்று ஏற்படாதவர்களுக்கும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை தொற்று குறைவாக ஏற்பட்டுள்ள மாவட்டங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பாதிப்பு கடுமையாக இருக்கும்.

மூன்றாவது அலையில் யாருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்?

  1. வயது குறைவானவர்கள்
  2. கர்ப்பிணிகள்
  3. பாலூட்டும் தாய்மார்கள்
  4. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படலாம்.

பன்றிக் காய்ச்சலுக்கும், கரோனாவுக்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள்?

  • உலகளாவிய பயணம் மிக அதிகமாக இருந்ததால் 2009ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் அதிவிரைவாக உலகெங்கும் பரவியது. அதேபோல் கரோனா பெருந்தொற்றும் உலகெங்கும் பரவியுள்ளது.
  • மக்கள் தொகை அடர்த்தியான பெருநகரங்கள், காற்றோட்ட வசதியில்லாத வணிக வளாகங்கள், மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பரவியது. கரோனாவும் அதேபோல் பரவுகிறது. கரோனா தொற்றின் பரவும் தன்மை பன்றிக்காய்ச்சலை விட மிகமிக அதிகமாக உள்ளது.

கரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும்?

நாட்டில் உள்ள 90 விழுக்காடு நபர்களுக்கு நோய்த் தொற்றின் மூலமாகவோ, தடுப்பூசி மூலமாகவோ நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படும்போது தொற்று கட்டுக்குள் வரும்.

தொற்று பரவலைத் தடுக்க செய்ய வேண்டியவை?

  1. துக்க காரியங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினராகவும் இறுதி சடங்குகளை செய்பவராகவும் இருந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.
  2. சுப காரியங்களை ஒத்தி வைக்கலாம். தவிர்க்க முடியாத நிலையில், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்
  3. தீவிரமான பிரச்னைகளுக்கு மட்டும் மருத்துவனையை நாடலாம், பிறவற்றிற்கு தொலைபேசியில் மருத்0துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளலாம்.
  4. நகர்ப் புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்புபவர்கள், வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அருகில் உள்ளவர்களின் வீடுகளுக்கு செல்லக்கூடாது.
  5. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
  6. வீட்டை விட்டு வெளியே சென்றால் முகக்கவசம் அணிவதை தவிர்க்கவேண்டும்.
  7. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனடியாக கை, கால்கள், முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
  8. கரோனா அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  9. துணைநோய்கள் உள்ளவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  10. காற்றோட்ட வசதி இல்லாத கடைகள், வணிக வளாகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகளில் கடைப்பிடிக்க வேண்டியவை

  • பிரசவத்தின்போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion) உடன் இருந்தால் போதுமானது. குழந்தையைப் பார்க்க உறவினர்கள் நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரக்கூடாது.
  • உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, ஆரோக்கியமாக இருக்கும் வயது குறைந்த ஆரோக்கியமான உறவினர் ஒருவர், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் ஒருவர் உடனிருக்கலாம்.
  • மருத்துவமனைகள் காற்றோட்ட வசதி உள்ள வகையில் அமைக்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் காற்றை வெளியேற்றும் சக்தி வாய்ந்த காற்றாடிகள் அமைக்கப்பட வேண்டும்
  • லேசான கரோனா அறிகுறிகள் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
  • மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம்.
  • வீட்டில் இருப்பவர்கள் பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை மூன்று நான்கு முறைகள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு மிக அபாயகரமான அளவான எழுபது விழுக்காட்டிற்கும் கீழாகக் குறையும்போது மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
  • ஆக்சிஜன் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சேமிப்பு அளவை அதிகரித்தல், கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் உள்பட அனைத்து முக்கிய உபகரணங்களையும் தேவையான அளவு தனியார் மருத்துவமனைகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
    கரோனா சிகிச்சை
    கரோனா சிகிச்சை

உதவி எண்கள் வழங்குவதன் அவசியம்?

  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர், கிராம, நகர சுகாதார செவிலியர்களின் கைபேசி எண்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட‌ வேண்டும்.
  • அவசர உதவி எண்கள்: 102, 104, 108
  • மாவட்ட, மாநில உதவி எண்கள் -044-29510400; 044-29510500; 94443 40496 & 87544 48477
  • இவை தவிர வட்டார அளவிலான தொலைபேசி எண்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

  • மருத்துவமனையில் பணிபுரிவோர்
  • அறுபது வயதுக்கு மேல் உள்ள முன்களப் பணியாளர்கள்
  • சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னை போன்ற இணை நோய் உள்ளவர்கள்
  • பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், அவர்களது குடும்பத்தினர்
  • மக்களுடன் நேரடியாக பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள்
  • பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தொடர்புடையவர்கள்
  • மருந்து கடைகள், நியாய விலைக்கடைகள் போன்ற இடங்களில் பணிபுரிவோர்.

தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை மனதில் கொண்டு, தயவு செய்து கர்ப்பிணிப் பெண்களையும் பாலூட்டும் தாய்மார்களையும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்ளுங்கள்!

இதையும் படிங்க: கரோனா தொற்று தாக்கம்: தாய்மார்கள் தப்பிக்க என்ன வழி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.