ETV Bharat / state

மருத்துவ ஆராய்ச்சிக்கான வழிகாட்டு நெறிமுறை: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு - niti ayog

சென்னை: மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக் கோரிய  மனுவிற்கு  மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Dr Cherian move permission for medical research, notice to state and central, MHC

author img

By

Published : Aug 25, 2020, 8:08 PM IST

பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செரியன் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய மருத்துவத் துறையை உலகத்தரத்திற்கு முன்னேற்றும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் அது தோல்வியடைந்து விடுகிறது.

மேலும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம், வங்கிகளின் கடுமையான நடைமுறைகள் ஆகியவை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது.

பிரதமரின் ஆலோசனைப்படி, இந்த விவகாரத்தை நிதி ஆயோக்கின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், இது குறித்து விவாதித்த நிதி ஆயோக், அரசு அமைப்புகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் அனுப்பியுள்ள போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு எதிர்காலத்தில் இளம் விஞ்ஞானிகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர் கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மத்திய - மாநில அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நிதி ஆயோக் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.