ETV Bharat / state

'அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை புறக்கணிக்காதீர்கள்': அதிமுகவிடம் டி.ஆர்.பாலு எம்.பி., வேண்டுகோள் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை புறக்கணிக்க வேண்டும் என்று அதிமுகவிடம் டி.ஆர்.பாலு எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நூலகம் திறப்பு
நூலகம் திறப்பு
author img

By

Published : Jan 28, 2021, 10:03 AM IST

சென்னை சண்முகம் சாலையில் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா தொகுதி நிதியிலிருந்து சுமார் ரூ.85 லட்சம் செலவில் நூலகம் அமைத்துள்ளார். இதை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நூலகம் திறப்பு

அப்போது டி.ஆர். பாலு பேசியதாவது, "இன்று ஆட்சியில் உள்ளவர்கள் மாறலாம். நாளை பெரிய ஆட்சி அமையலாம். அலுவலர்கள் மாறக் கூடாது. அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். நான் 10 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அரசு விழாவில் கலந்து கொள்கிறேன். முதல் முறையாக இப்போது தான் என்னை அழைத்துள்ளார்கள். இதற்கு முன் எந்த அரசு விழாவிலும், என்னை அழைக்க மாட்டார்கள்.

நம்முடைய நண்பர்கள் தான், தற்போது ஆட்சியில் உள்ளார்கள். எந்த ஆட்சி நடந்தால் என்ன? அதிமுகவில் உள்ளவர்களும் என் நண்பர்கள் தான்; அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, யாரையும் புறக்கணிக்காதீர்கள். நாங்கள் எதிரிகள் இல்லை" இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியை அகற்ற வேளாண் சட்டம் ஒன்றே போதும்- டி.ஆர். பாலு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.