சென்னை: ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலை மற்றும் ஜெயலலிதா உருவச்சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
'இந்த தீர்ப்பு மகத்தான, வெற்றிகரமான தீர்ப்பு. இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டு. அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. எடப்பாடி.கே.பழனிசாமி தலைமையில் அதிமுக உள்ளது. 99 சதவீத நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி.கே.பழனிசாமி தலைமையில் தான் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். விரைவில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தலைமைக் கழகம் முடிவு செய்யும்' எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் தம்பிதுரை,
'உண்மையான அதிமுக தொண்டர்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அந்த பக்கமே உண்மையான தீர்ப்பு வந்திருக்கிறது. உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் என உச்ச நீதிமன்றத்திலேயே தீர்ப்பு வந்துவிட்டது. ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் தினத்திற்கு முன்பாக எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிமுக தொண்டர்களிடையே எந்த ஒரு விரிசலும் இல்லை. நாங்கள் எப்பவும் போல் ஒன்றிணைந்து தான் இருக்கிறோம். எனவே, இரட்டைத் தலைமைக்கு என்றுமே வாய்ப்பில்லை; ஒற்றைத் தலைமை தான் நிரந்தரம்' எனத் தெரிவித்தார்.
இரட்டைத் தலைமைக்கு என்றுமே வாய்ப்பில்லை, ஒற்றைத் தலைமை தான் நிரந்தரம் - தம்பிதுரை
இரட்டைத் தலைமைக்கு என்றுமே வாய்ப்பில்லை எனவும்; ஒற்றைத் தலைமை தான் நிரந்தரம் எனவும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.