ETV Bharat / state

கடையின் பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை!

நொளம்பூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் கொள்ளடித்த இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் கொள்ளை

author img

By

Published : Jun 9, 2021, 10:38 PM IST

சென்னை முகப்பேர் மேற்கு கம்பர் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 8) முகப்பேரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து, திருவள்ளுவர் மாவட்ட கிழக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் சுமதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்த மேலாளர் சுமதி சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்ததலில் ரூ.6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்த பார் உரிமையாளர் ராஜா தனது கூட்டாளி குணாவுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தற்போது, தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.