ETV Bharat / state

வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு! - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல் உயர் அலுவலர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
author img

By

Published : Sep 30, 2021, 7:47 PM IST

சென்னை: விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் தவிர மற்ற காரணங்களுக்காக ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது எனத் தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருநெல்வேலியில் கடந்த நான்கு நாள்களில் முன்விரோதம் காரணமாக ஐந்து கொலைகள் நடந்தன.

முன்விரோத கொலை சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Operation Storm) என்ற பெயரில் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

52 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 3,325 பேர் கைது செய்யப்பட்டனர். 1,100 கத்திகள் மற்றும் 7 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் ஆயுதங்களைத் தயார் செய்பவர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை அந்தந்த எல்லைக்குள்பட்ட காவல் துறையினர் அழைத்து கூட்டம் நடத்தினர். மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி, எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்குத் தவிர மற்ற காரணங்களுக்காக ஆயுதங்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் விற்கக்கூடாது. ஆயுதங்களைத் தயார் செய்யும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களைத் தயாரிப்பவர்களைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல் உயர் அலுவலர்களுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இயல்பைவிட இந்தாண்டு பருவமழை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.