உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா என்னும் வைரஸ் கிருமியானது தமிழ்நிலத்தை விட்டுவைக்கவில்லை. மருத்துவர்கள், சாமானியர்கள், காவல் துறையினர், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது இந்த கொடிய வைரஸ்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கரோனாவிலிருந்து மீண்டவர்களை ஒருசிலர் ஒதுக்கி வைப்பது வருத்தமளிக்கிறது. இது அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். ஏற்கனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடல், மன ரீதியாகப் போராடி வந்தவர்கள்.
எனவே அவர்களிடம் வேறுபாடு காட்டாது பரிவோடு நடந்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.