ETV Bharat / state

உள்நாட்டு விமான சேவை தொடக்கம்: சென்னையில் 15 விமானங்கள் ரத்து! - chennai airport

சென்னை: மத்திய அரசின் அனுமதியின்படி நாடு முழுவதும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டு போதிய பயணிகள் இல்லாமல் 15 விமானங்கள் ரத்துசெய்யப்படுள்ளன.

சென்னை விமானநிலையம்
சென்னை விமானநிலையம்
author img

By

Published : May 25, 2020, 9:14 AM IST

Updated : May 25, 2020, 10:46 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 61 நாள்களாக நாடு முழுவதும் பயணிகள் விமான சேவை ரத்துசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்றுமுதல் (மே 25) உள்நாட்டு விமான சேவை நிபந்தனைகளுடன் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் விமான சேவையைத் தொடங்கியுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று காலை விமான சேவை தொடங்கப்பட்டு, முதல் விமானமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் காலை 6 மணிக்கு மதுரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. ஆனால் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் அந்த விமானம் புறப்படவில்லை.

அதனால் முதல் விமானமாக 6.35 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 120 பயணிகளுடன் டெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அதையடுத்து காலை 6.50 மணிக்கு டெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.

போதிய பயணிகள் இல்லாததால் ரத்துசெய்யப்பட்ட விமானங்கள்,

  • மதுரை - 5.40 - இண்டிகோ
  • மும்பை - 6.25 - ஸ்பைஸ் ஜெட்
  • பெங்களூரு - 7.20 - ஸ்பைஸ் ஜெட்
  • சேலம் - 7.25 - ஸ்பைஸ்ஜெட்
  • கொல்கத்தா - 7.35 - இண்டிகோ
  • கவுஹாத்தி - 7.45 - ஸ்பைஸ் ஜெட்
  • கொச்சி - 8.00 - இண்டிகோ
  • பெங்களூரு - 8.15 - ஏர் ஏசியா
  • ஹைதராபாத் - 8.30 - இண்டிகோ
  • புனே - 9.00 - இண்டிகோ
  • மும்பை - 9.00 - இண்டிகோ
  • ஹைதராபாத் - 9.05 - ஏர் ஏசியா
  • பெங்களூரு - 9.20 - ஸ்பைஸ் ஜெட்
  • ஹைதராபாத் - 9.30 - இண்டிகோ

மேலும் மும்பை, கொல்கத்தா தவிர மற்ற நகரங்களான டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையம்

சென்னையிலிருந்து இன்று 19 விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. அதைப்போல் 16 விமானங்கள் சென்னை வருகின்றன. அதன்படி இன்று மட்டும் சென்னையில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏா் ஏசியா, ஏா் இந்தியா விமானங்கள் என மொத்தமாக 35 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

Last Updated : May 25, 2020, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.