ETV Bharat / state

'சாலை பணியின்போது நாயையும் சேர்த்து புதைத்த தொழிலாளர்கள்'

சென்னை: சாலை அமைக்கும்போது நாயையும் சேர்த்து தார் ஊற்றி புதைத்த சம்பவம் கோட்டூர்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்து கிடக்கும் நாயை மீட்கும் விலங்கு நல அமைப்பினர்
author img

By

Published : Sep 25, 2019, 9:04 PM IST

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கே உறங்கிக் கொண்டிருந்த நாயினை கவனிக்காத தொழிலாளர்கள் நாயின் வலது கால் மற்றும் வால் பகுதியையும் சேர்த்து சிமெண்ட் கலவையை ஊற்றியுள்ளனர். இதனால் நகர முடியாமல் தவித்த அந்த நாய், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதைப் பார்த்த அப்பகுதியினர் சமூக விலங்கு நல அமைப்பு (blue cross) அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த விலங்குநல அமைப்பினர் சாலையில் இறந்து கிடந்த நாயின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிமெண்ட் கலவையில் முடப்பட்ட நாய்

Intro:Body:சாலை அமைக்கும்போது உயிரோடு இருந்த நாயின் மீது கலவை ஊற்றப்பட்டு நாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே சாலை சீரமைக்கும் பணி நடைப்பெற்றது.அப்போது அங்கே உறங்கி கொண்டிருந்த நாயின் வலது கால் மற்றும் வால் பகுதியில் ஜல்லி கலவை ஊற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மழை பெய்ததால் நாய் நகர முயற்சி செய்துள்ளது.ஆனால் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் சம்பவ இடத்திலேயே பலியானது.இதனை தொடர்ந்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் சிலர் நாய் இறந்து கிடப்பதாக ப்ளு கிராசிற்கு தகவல் அளித்து உள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ப்ளு கிராஸ் ஊழியர்கள் சுத்தியலை கொண்டு இறந்து கிடந்த நாயை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.