ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு?

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி. விலையைவிட மது வாங்குவோரிடம் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படும் நிலையில், ஊழியர்களின் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

does-the-government-care-about-the-welfare-of-tasmac-employees

author img

By

Published : Sep 16, 2020, 4:57 PM IST

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் குறைந்துவருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதேபோல் மதுவால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி. விலையைவிட மது வாங்குவோரிடம் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணம் மொத்தமாக எங்கு செல்கிறது, என்னதான் நடக்கிறது?

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருப்பதாக அரசால் கூறப்படுகிறது. இதில் சென்னையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை உதாரணமாக எடுத்துக்கொண்டால் எங்கு என்ன நடக்கிறது என்பதை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் நடப்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஒரு டாஸ்மாக் கடையில் 15 பெட்டிகள் (மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள்) ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஐந்து பெட்டிகள் வரை கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார் எனப்படும் மகிழ் மன்றத்திற்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கொடுக்கப்பட வேண்டும். இதற்காக அவர்கள் கடைக்காரர்களிடம் எம்.ஆர்.பி. விலையை மட்டுமே கொடுப்பார்கள்.

அடுத்ததாக, மீதமுள்ள 10 பெட்டிகளை மது வாங்குவோரிடம் எம்.ஆர்.பி. விலையைவிட அதிகமாக 5 ரூபாய் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெட்டியில் 45-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தாலும், அவற்றில் இந்த லாபம் என்பது 10 பெட்டிகளுக்கும் சேர்ந்து 2500 ரூபாய் வரை கிடைக்கிறது.

இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. ஆம், இந்தப் பணத்தை அப்படியே விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர் ஆகியோர் அவர்களின் பாக்கெட்களில் வைத்துக்கொண்டு சென்றுவிட முடியாது. ஏன் என்றால், ஒவ்வொரு பெட்டிகளிலும் நிச்சயமாக உடைந்த பாட்டில்கள் இருக்கும் இவற்றின் மொத்த மதிப்பு சுமாராக 500 முதல் 800 ரூபாய் வரை இருக்கிறது. அதிகம் விலை வைத்து சம்பாதித்த பணத்தில் இந்தப் பணம் போக மீதியாக உள்ள 1700 ரூபாய் என ஒரு நாளைக்கு இவர்கள் சம்பாதித்தாலும் 30 நாள்களுக்கு 51,000 ரூபாய் கிடைக்கிறது.

இந்தப் பணத்தில் கடையின் வாடகையாக குறைந்தது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரைதான் செலுத்துகிறார்கள். அடுத்ததாக பகுதி மேலாளர், மாவட்ட மேலாளர், டாஸ்மாக் பணியில் உள்ள ஜூனியர் அசிஸ்டண்டுகள் என நாங்கிற்கும் மேற்பட்டவர்களுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும் அல்லது மிரட்டி வாங்கப்படும். மாவட்ட மேலாளருக்கு மட்டுமே மாதம் 15 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது.

இதன்பிறகு பெட்டிகளை இறக்க வருபவர்களுக்கும் பணம் கொடுத்து மீதமுள்ள சிறு தொகையை மட்டுமே கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர் உள்ளிட்டோர் எடுத்துக்கொள்கின்றனர்.

ஒரு காலி பாட்டிலின் விலை 3 ரூபாய், அதில் உள்ள மதுவின் விலை 9 ரூபாய் ஆக மொத்தம் 12 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் அரசால் 150 முதல் 300 ரூபாய் வரை மது குடிப்போருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் இதில் எத்தகைய லாபம் அரசுக்கு கிடைக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள்.

"கடந்த 18 ஆண்டுகளில் 37 ஆயிரம் பணியாளர்களாக இருந்த இப்பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆயிரமாக குறைந்துள்ளது. இதில் பலரும் மன உளைச்சல் காரணமக குடிக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டுமே 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகளாகப் பணியாற்றும் எங்களுக்கு காலமுறை ஊதியம்கூட அரசு வழங்க மறுக்கிறது. எங்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் எம்.ஆர்.பி.யைவிட அதிகமாக மது விற்க தூண்டக் கூடாது. அலுவலர்கள் உள்பட யாரும் லஞ்சம் கேட்கக் கூடாது. இந்தப் பாவச் செயல்களிலிருந்து எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்

12 ரூபாய் மதுவை 300 ரூபாய் வரை விற்று கோடிகளை அள்ளும் அரசு, ஊழியர்கள் நலனுக்காக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்குமா? என தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஸ்குமாரை பலமுறை தொடர்புகொண்டும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு சாக்கடையும் சந்தன மெத்தைதான்: வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.