ETV Bharat / state

மருத்துவர்கள் சங்கத் தேர்தல்தான் மருத்துவர்களின் போராட்டங்களுக்குக் காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - booster vaccination

மருத்துவர்கள் சங்கத் தேர்தல்தான் மருத்துவர்களின் போராட்டங்களுக்கு காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் சங்கத் தேர்தல்தான் மருத்துவர்களின் போராட்டங்களுக்கு காரணம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

author img

By

Published : Sep 25, 2022, 3:11 PM IST

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாடு முழுவதும் 38ஆவது கரோனா தடுப்பூசி முகாம்கள், 50,000 இடங்களில் நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வரும் முகாம், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கடைசி முகாமாக உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி மத்திய அரசின் உத்தரவின்படி, வரும் 30ஆம் தேதி வரையில் போடப்படும். அதன்பின்னர் மத்திய அரசு அனுமதி அளித்தால் இலவசமாக போடப்படும்.

தமிழ்நாட்டில் இதுவரை 96.55 விழுக்காடு பேர் முதல் தவணைத்தடுப்பூசியும், 91.39 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி 30ஆம் தேதிக்குப்பின் பணம் செலுத்தி, தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்படுமா என்பது தெரியவில்லை என்பதால், அடுத்த ஐந்து நாட்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகள் முதல் 16 வயது வரை செலுத்தப்படும் கரோனா தடுப்பூசி உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகளும் போடப்படும். வியாழக்கிழமைகளில் 12 முதல் 17 வயதினருக்கான கரோனா தடுப்பூசி பள்ளிகளில் நேரில் சென்று செலுத்தப்படும்.

ஆனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்களிடையே சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 20.04 விழுக்காடு பேர், அதாவது 86,31,976 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைச்செலுத்தியுள்ளனர்.

'மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 90 லட்சமாவது பயனாளிக்கு இன்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 40 விழுக்காடு பேருக்கு, இந்த திட்டத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக உயர் ரத்த அழுத்த நோயாளிகள் 35 லட்சம் பேரும், நீரிழிவு நோய்க்கு 24 லட்சம் பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என இரு நோய்களும் பாதிக்கப்பட்ட 18 லட்சம் பேரும், பேலியேட்டிவ் கேர் என்ற நோய் ஆதரவு நோயாளிகள் 3 லட்சம் பேரும், பிசியோதெரபி நோயாளிகள் 7.85 லட்சம் பேரும், டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள 1,000 பேரும் பயனடைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 465 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 269 பேரும், வீட்டில் 186 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 5 முதல் 14 வயதுடையோருக்கு 62 பேருக்கும், 15 முதல் 60 வயதுடையோருக்கு 223 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 99 பேருக்கும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

மேலும் நான்கு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஆயிரம் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறிந்த பகுதியில் தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 4,193 முகாம்கள் நான்கு நாட்களில் நடத்தப்பட்டு, 10,89,529 பேர் காய்ச்சல் முகாம் மூலம் பயனடைந்துள்ளனர். அதேபோல் 352 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைக்கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்களும் 100 விழுக்காடு பேர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை என் 257 மற்றும் 354 ஆகியவற்றை அமல்படுத்துவதில் சங்கங்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 90 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கபட்டது

தற்போது கருத்து ஒற்றுமை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் மருத்துவர்கள் சங்கங்கள் பல உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதன் போட்டியாகத் தான் இது போன்ற போராட்டங்களை அறிவிக்கின்றனர்.

ஆனால், இந்த மருத்துவர்கள் சங்கத்தேர்தலுக்குப்பிறகு போராட்டங்கள் இருக்காது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதாகத் தகவல் வெளியாவது தவறான தகவல். போதிய படுக்கைகள் காலியாகத்தான் உள்ளது. ஏதேனும் புகார்கள் இருந்தால் 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மருத்துவர்கள் சங்கத் தேர்தல்தான் மருத்துவர்களின் போராட்டங்களுக்குக் காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா தொற்று அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், கரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.