ETV Bharat / state

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: ஆறு வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எழுத்துப் பூர்வமாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்ததால் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

DoctorsStrike
author img

By

Published : Aug 27, 2019, 10:28 PM IST

Updated : Aug 28, 2019, 5:38 AM IST

இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும், பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவந்தன.

மருத்துவர்கள் போராட்டம்

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தையில் மருத்துவ பிரதிநிதிகள் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவ பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

இந்நிலையில், மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Intro:Body:

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் உண்ணாவிரதத்தில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர்  பேச்சுவார்த்தையில், உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் முனைவர் நடராஜன் ஐஏஎஸ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வு துறை துணை செயலாளர்கள், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சுவாதி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும், பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத  இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.                        அரசு மறுப்பவர் அவர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு இதுவரை எட்டப்படவில்லை. அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக அரசு சார்பில் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஆனால் அரசு சார்பில் எந்தவிதமான உறுதியும் அளிக்கப்படாததால்  மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர்..

Conclusion:
Last Updated : Aug 28, 2019, 5:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.