ETV Bharat / state

இளைஞருக்கு மறு வாழ்வு அளித்த மருத்துவர்கள்! - கால்களை இழந்த இளைஞர்

மின்சாரம் தாக்கி தனது இரு கால்களையும் இழந்த இளைஞருக்கு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செயற்கை கால்களைப் பொருத்தி நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இளைஞருக்கு மறு வாழ்வு அளித்த மருத்துவர்கள்!

author img

By

Published : Dec 18, 2020, 7:58 AM IST

சென்னை: மின்சாரம் தாக்கி இரண்டு கால்களையும் இழந்த இளைஞருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (19). 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மழை நேரத்தில், வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, குடையின் மேலுள்ள கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டு விபத்துக்குள்ளானது. அதனால் ஏற்பட்ட மின்சார தீ விபத்தில் பிரதாப் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டது.

கால்களை இழந்த பிரதாப்
கால்களை இழந்த பிரதாப்

கால்களை இழந்த பிரதாப்

இந்த விபத்தில் தீவிர பாதிப்பு அடைந்த பிரதாப்பை காப்பாற்ற அவருடைய இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், கால்கள் நீக்கப்பட்டதால், இனி வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியை சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நம்பிக்கையூட்டிய மருத்துவர்கள்

இந்தச் சூழலில் நம்பிக்கையூட்டும் வகையில், பிரதாப் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மற்றும் மறுவாழ்வு துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அவரின் இழந்த கால்களைப் பரிசோதித்து அதற்குரிய பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவர்கள் முறைப்படி பயிற்சி அளித்தனர். மருத்துவர்களின் விடாமுயற்சியால், பிரதாப்பை நடக்கவைக்கத் தேவையான செயற்கைக்கால்கள் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நடை பயிற்சியில் பிரதாப்
நடை பயிற்சியில் பிரதாப்

கரோனாவை வென்று தன்னம்பிக்கையுடன் நடைபோடும் பிரதாப்

நவீன செயற்கைக்கால் தயாரிக்கப்பட்டு பிரதாப் நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டு கால்களையும் இழந்த நபர் ஒருவருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தி நாளும் உணர்ச்சிகள் சரியாகத் தெரியாமல் இருந்தால் உடல் எடையைச் சமப்படுத்தி நடப்பது மிகவும் சிரமமாகும்.

இருந்தபோதிலும், இயன்முறை மருத்துவர்கள் அளித்த பயிற்சியால், செயற்கைக் கால்களைப் பொருத்தியுள்ள பிரதாப் தனியாக நடக்கிறார். இதுமட்டுமன்றி செயற்கைக்கால் பொருத்தும் சிகிச்சை பெற்றுவந்தபோது, பிரதாப்பிற்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்தும் மீண்டுவந்த அவர், பிறரின் உதவியில்லாமல் தனது பணிகள் அனைத்தையும் தாமாகவே செய்துவருகிறார்.

விட முயற்சியில் பிரதாப்
விடா முயற்சியில் பிரதாப்

சொந்த ஊரில் நடக்கவுள்ள பிரதாப்

சைக்கிள் ஓட்டுவது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது என அனைத்து இயல்பான பணிகளையும் யார் துணையும் இன்றி தானே செய்கிறார். இதுபோன்ற செயல்கள் அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அடுத்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள பிரதாப் , தனது சொந்த ஊரில் தானாக நடந்துசெல்ல உள்ளார்.

இளைஞருக்கு மறு வாழ்வு அளித்த மருத்துவர்கள்!

மருத்துவர் பெருமிதம்

செயற்கைக் கால்கள் பொருத்திய நபர் ஒருவர் சக மனிதர்கள் செய்யும் இயல்பான அனைத்துப் பணிகளையும், எந்தவித சிரமமும் பாதிப்பும் இன்றி தாமாவே செய்வது என்பது பெருமைக்குரியது என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் திருநாவுக்கரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விலையில்லா முகக்கவசம் விநியோகம் செய்தவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.