தமிழ்நாடு முழுவதும் நான்கு வித கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த எட்டு நாள்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அரசுத் தரப்பில் பலவித பேச்சுவார்த்தை நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்நிலையில், இன்று காலை, அமைச்சர், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
மருத்துவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான பணி முறிவு (பிரேக் இன் சர்வீஸ்) நடவடிக்கை திரும்பப் பெறப்படுகிறது. அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.