ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடல் மறு அடக்கம்

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர் உடல் மறு அடக்கம்
மருத்துவர் உடல் மறு அடக்கம்
author img

By

Published : Jul 25, 2021, 3:14 PM IST

சென்னை: அமைந்தகரையை சேர்ந்தவர் நரம்பியல் மருத்துவர் சைமன். இவர் கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தினார். இவர் கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அடக்கம் செய்ய எதிர்ப்பு

அப்போது மருத்துவர் உடலை அண்ணாநகரில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்ய, அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகராறில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவர் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை.

மருத்துவர் உடல் மறு அடக்கம்
மருத்துவர் உடல் மறு அடக்கம்

மருத்துவர் மனைவி கோரிக்கை

அதன் பிறகு காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் மருத்துவரின் உடல் அண்ணாநகரில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி ஆனந்தி தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் மனு அளித்தார். ஆனால் இதனை பரிசீலித்த மாநகராட்சி ஆணையர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

உடல் தோண்டி எடுப்பு

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் மனைவி ஆனந்தி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இன்று (ஜூலை.25) காலை சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலகள் முன்னிலையில் மருத்துவர் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

மறு அடக்கம்

பிறகு காவல் துறையினர் பாதுகாப்போடு மருத்துவர் உடல் வாகனத்தில் வைத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு, மருத்துவர் உடல் மறு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சைமனின் மனைவி ஆனந்தி, மகன்கள் ஆண்டன், அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தரமற்ற முகக்கவசங்கள் குறித்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.