ETV Bharat / state

கரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் பாதுகாத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் விஜயா

author img

By

Published : Apr 11, 2020, 5:33 PM IST

Updated : Apr 30, 2020, 4:50 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள மகளிர் நோயியல் மருத்துவமனை மற்றும் அரசு தாய்-சேய் மருத்துவமனையின் இயக்குனரும், பேராசிரியருமான மருத்துவர் விஜயா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி...

மருத்துவர் விஜயா
மருத்துவர் விஜயா

கேள்வி: கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கர்ப்பிணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

பதில்: தற்பொழுது அனைவரும் காலை முதல் மாலை வரை கரோனா பற்றிய சிந்தனையில்தான் இருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு, தங்களுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. அவர்களுக்கு இதுபோன்ற தொற்று வரக்கூடாது என்பதில் எங்களுக்கு அக்கறை உள்ளது. அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கர்ப்பிணி பெண்கள் தனி நபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் எவ்வாறு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்களோ அதுபோன்று இருக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பொழுது மாஸ்க் போட்டுக் கொள்ளலாம் அல்லது சிறிய டவல் கட்டிக் கொள்ளலாம். கைக்குட்டைகளை பயன்படுத்தும்போது 4 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது வேறொன்றை மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் அதனை நன்றாக டெட்டால் போட்டு அலசி காய வைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் முடிந்தவரை அவர்களின் துணியை தனியாக துவைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சாப்பிடும் தட்டு, டம்ளர் தனியாக பயன்படுத்தலாம். இதுபோன்று ஏன் கூறுகிறேன் என நினைக்காதீர்கள். உங்களை பாதுகாத்துக் கொள்வதற்குதான் இந்த அறிவுரைகள். நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து இருக்காமல் இருப்பது நல்லது.

கர்ப்பிணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். முடிந்தால் காலை மாலை என இரு வேளையும் குளிக்கலாம். சிறிய அளவில் யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணிகள் மாத பரிசோதனைக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் செல்ல வேண்டும் என்பது கிடையாது. அதே நேரத்தில் அவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும்.

கர்ப்பிணிகள் மூன்று மற்றும் ஐந்தாம் மாதம் எடுக்க வேண்டிய குறைபாடுகளை கண்டறிவதற்கான ஸ்கேனை நிச்சயம் செய்ய வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மக்கள் நல்வாழ்வுத் துறையை தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகள் அவசரப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம். கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தொற்று எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே பிறக்கும் குழந்தையின் நலனை யோசித்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கேள்வி: அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் செய்துள்ள சிறப்பு வசதிகள் என்ன?

பதில்: கர்ப்பிணி ஒருவர் வலியுடன் வந்தால் பார்க்க மாட்டோம் என கூறாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது. எனவே அதற்கான வசதிகளை செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர்.

எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு தனியாக வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசவ முன் கவனிப்பு பகுதி மற்றும் பிரசவ வார்டு, நோய் தொற்று உள்ளவருக்கு பிறந்த குழந்தையை கவனிப்பதற்காக தனி பகுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் செய்துள்ள சிறப்பு வசதிகள் என்ன?

மேலும், குழந்தை பிறந்தால் முன்பு போல் உடனே வீட்டிற்கு அனுப்ப முடியாது. 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும். எனவே அதற்குத் தேவையான வகையில் தனியாக ஒரு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு மாஸ்க் அளிப்பதுடன், கிருமி நாசினியை வழங்கி தனி நபர் இடைவெளியை பின்பற்றுவது பற்றி அறிவுரை வழங்கி வருகிறோம்.

கேள்வி: கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று வரக்கூடாது என்பது அனைவரின் எண்ணமாக இருந்தாலும், வந்தால் குழந்தைக்கும் தொற்று ஏற்படுமா?

பதில்: கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. கரோனா அனைவருக்கும் புதிதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூறும் கருத்து, கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கு தொற்று வராது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். இதன் மூலமும் கரோனா பரவாது. இந்த தொற்றானது இருமலின் பொழுது வரும் எச்சில் துளிகள் மூலம் பரவுகிறது. எனவே கண்டிப்பாக மாஸ்க் போட வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு காற்று திவளைகள் குழந்தையின் மீது படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பால் கொடுப்பதன் மூலம் கண்டிப்பாக பரவாது.

கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று வந்தால் குழந்தைக்கும் தொற்று ஏற்படுமா?

கேள்வி : ஆறு மாதத்திற்கு உட்பட்ட கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

பதில்: தாய்க்கு தொற்று இருந்தால் குழந்தைக்கு இல்லாமலும், அம்மாவுக்கு இல்லாமல் குழந்தைக்கு தொற்றும் ஒரு சிலருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் தாத்தா பாட்டியின் உதவி தேவை. முடிந்த வரை குழந்தையை தனிமையில் வைத்திருக்க வேண்டும். 28 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

ஆறு மாதத்திற்கு உட்பட்ட கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

Last Updated : Apr 30, 2020, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.