இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் கூறியதாவது, 'ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை வரவேற்புக்குரியது. ஆனால், அக்கல்லூரிகளை மக்கள் நல்வாழ்வுத்துறையோடும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தோடும் இணைப்பது தொடர்பாக காலவரம்பை நிர்ணயிக்கவில்லை. அது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த அரசாணை கடந்த 2020 மார்ச் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 7 மாதங்களுக்கு மேல் காலதாமதமாகியுள்ளது. மருத்துவ மாணவர்களின் போராட்டத்தால்தான் தற்பொழுதாவது, இந்த அரசாணை வெளியாகியுள்ளது. எனவே, கல்லூரிகளை சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் இதை மாற்றுவதற்கான கால வரம்பையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
கட்டண வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும். இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் தான் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிக்கும் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணக் குறைப்பு தொடர்பான அறிவிப்பையும், மக்கள் நல்வாழ்வுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும். 7 மாதத்திற்கு முன்பே போட்டிருக்க வேண்டிய அரசாணையை இப்பொழுது போட்டு, மருத்துவ மாணவர்களை ஏமாற்றிவிடலாம் என அரசு கருதக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க: 'பட்ஜெட் 2020ஆல் இலவச சிகிச்சை மறுக்கப்படும்' - மருத்துவர் ரவீந்திரநாத்!