ETV Bharat / state

'சூர்யா கூறியதில் தவறு இல்லை, அவமதிப்பு வழக்கு பதிய வேண்டாம்' - சமூக ஆர்வலர் சரவணன்

சென்னை: கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு பதிய வேண்டாம் என சமூக ஆர்வலர் சரவணன் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மனு அளித்துள்ளார்.

surya
surya
author img

By

Published : Sep 15, 2020, 12:43 PM IST

நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்திருந்தார்.

இதற்கு மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தே ஆக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த கோபத்தில் சூர்யா கூறிய கருத்தை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடலாம் என சந்துரு, ஹரிபரந்தாமன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "கோவிட்-19 காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற வேண்டிய பல்வேறு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், இறுதியாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பருவமழை தீவிரம் இனிமேல்தான் அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் அதனைப் பரிசீலிக்காமல் மத்திய அரசின் நீட் தேர்வை 13ஆம் தேதி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் நடத்தியது; இந்தத் தேர்வுக்கு கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கரோனா காரணமாக வெளியில் சென்று முறையாக பயிற்சி எடுக்கவோ அல்லது ஆசிரியர்களிடம் நேரடியாக விவாதிக்கவோ முடியவில்லை.

மாணவர்களுக்கு நீட் தேர்வின் மீது உள்ள பயத்தை போக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த ஒரு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நடிகர் சூர்யா தனது ஆதங்கத்தை மாணவர்களின் நலனுக்காக வெளிப்படுத்தியிருந்தார்.

கோவிட் காலத்தில் நீதிமன்றங்கள் காணொலி மூலம் நடக்கும் பொழுது மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து 100 விழுக்காடு உண்மையாகும். மக்களுக்கு நீதிமன்றங்களும் அரசும் முதலில் முன்மாதிரியாக திகழவேண்டும். சூர்யாவின் கருத்திற்கு மக்களாகிய அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

சமூக ஆர்வலர் சரவணன் கடிதம்
சமூக ஆர்வலர் சரவணன் கடிதம்

சூர்யா உண்மைக்குப் புறம்பான பொய்யான தகவல்களை தெரியப்படுத்தவில்லை. எனவே, அவரின் கருத்தை நீதிமன்ற அவமதிப்பு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2021இல் சசிகலா விடுதலை - சிறைத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.