ETV Bharat / state

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் திமுக 14 மண்டலங்களில் போட்டியின்றி வெற்றி..

author img

By

Published : Mar 31, 2022, 2:24 PM IST

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டலங்களுக்கு திமுக வேட்பாளர்களைத் தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர்.

dmk-won-15-zonal-chairman-and-committee-posts-of-chennai-corporationஒரு மண்டலத்தில் தேர்தல் காரணம் என்ன சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் திமுக 14 மண்டலங்களில் போட்டியின்றி வெற்றி சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தேர்தல்
dmk-won-15-zonal-chairman-and-committee-posts-of-chennai-corporation ஒரு மண்டலத்தில் தேர்தல் காரணம் என்னசென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் திமுக 14 மண்டலங்களில் போட்டியின்றி வெற்றிசென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தேர்தல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மண்டல குழு தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று (மார்ச்.30) காலை 9.30 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகை மன்ற அரங்கில் தொடங்கியது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் இத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டலங்களுக்கு திமுக வேட்பாளர்களைத் தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர். இதில் 14 வது மண்டலத்திற்கு (வார்டு 182) மட்டும் அதிமுக சார்பில் கே.பி.கே.சதீஷ்குமார் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை எதிர்த்து போட்டியிட்டார்.

சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தேர்தல்

இதனையடுத்து, இருவரும் மண்டல குழுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது.
அவர்கள் இரண்டு பெயர்களையும் சீட்டில் அச்சடிக்கப்பட்டு அந்த மண்டலத்தில் உள்ள 11 உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. சிவப்பு கலர் பேனாவில் ஆதரவளிக்கும் வேட்பாளர் பெயர் மேல் குறிக்க வேண்டும், குறித்த பிறகு அங்கு வைக்கப்பட்டு இருந்த வாக்கு பெட்டியில் போடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

11 மாமன்ற உறுப்பினர்களும் வாக்கு செலுத்திய பிறகு அதிமுக சார்பில் போட்டியிட்டு கே.பி.கே.சதீஷ்குமார், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனறும், திமுக உறுப்பினர்கள் தங்களது மொபைல் போன்களை எடுத்துச் சென்று யாருக்கு வாக்களித்தோம் என்று புகைப்படம் எடுத்த பிறகு வாக்குப் பெட்டியில் வாக்குச்சீட்டு போட்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்.

அதைத்தொடர்ந்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைப் புகாராக எழுதி ஆணையரிடமும் ஒப்படைத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையர் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன் பெயரில், மன்ற உறுப்பினர் 11 நபர்களில் செல்போன்களை பெற்றுக் கொண்டு வாக்கு செலுத்த அனுமதித்தார்கள்.

அதன் முடிவில் திமுக வேட்பாளர் எஸ்.வி. ரவிச்சந்திரன் மொத்தமுள்ள 11 வாக்குகளில், 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரவிச்சந்திரன், "ஒரு பொய் குற்றச்சாட்டு வைத்து மறு தேர்தல் நடத்த அதிமுக மாமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அதன்படி ஆணையர் தேர்தல் நடத்தினார். அதில் வெற்றி பெற்றேன். எனக்கு வாக்களித்த மாமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி" என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய கே.பி.கே.சதீஷ்குமார், " இந்த மண்டலத்தில் பல மாமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளிப்பதாக தொலைபேசியில் தெரிவித்தனர். ஆனால் இங்கே வந்து மாமன்ற உறுப்பினர்களை பயத்தை ஏற்படுத்தி எனக்கு வாக்களிக்காமல் செய்து விட்டார்கள். ஆளுங்கட்சி யாராக இருந்தாலும் நேர்மையாகத் தேர்தல் நடைபெற வேண்டும். வெற்றியைத் தந்தாலும் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.