சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி சென்னை மாநகராட்சியின் 13ஆவது மண்டலத்தில், 12 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெற்றிபெற்ற கட்சி, வாக்கு வித்தியாசங்கள் பின்வருமாறு:
- வார்டு 168 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் மோகன்குமார் (10,214), அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை (1965) விட 8,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 169 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் மகேஷ்குமார் (11,012), அதிமுக வேட்பாளர் பழனியை (2,874) விட 8,138 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 170 - அதிமுக வெற்றி
வார்டு 170இல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளரும், அதிமுக வேட்பாளருமான கதிர் முருகன் (7243), இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் முத்தழகனை (6810) விட 433 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 171 - திமுக வெற்றி
திமுக சார்பில் போட்டியிட்ட கீதா (8,784), அதிமுக வேட்பாளர் செல்வி குணாவை (3232) விட 5,552 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 172 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் துரைராஜ் (8,824), அதிமுக வேட்பாளர் ஷேக் அலியை (2,535) விட
6,289 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
- வார்டு 173 - காங்கிரஸ் வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷினி (6,442), அதிமுக வேட்பாளர் கோகிலா கண்ணனை (4,226) விட 2,216 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 174 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் ராதிகா (6,250), பாஜக வேட்பாளர் ஆனந்தவள்ளியை (1,857) விட 4,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 175 - திமுக வெற்றி
திமுக சார்பில் போட்டியிட்ட மகேஷ்வரி முருகவேல் (10,183), அதிமுக வேட்பாளர் ஜெசிந்தா தேவி ராகுலை (4,151) விட 6,032 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 176 - திமுக வெற்றி
திமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்தன் (7,819), அதிமுக சார்பில் போட்டியிட்ட மூர்த்தியை (3,639) விட 4,180 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 177 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் மணிமாறன் (8,071), அதிமுக வேட்பாளர் சிவசுப்ரமணியனை (4,219) விட 3,852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 178 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் பாஸ்கரன் (7,786), அதிமுக வேட்பாளர் சரவணனை (4,240) விட 3,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 179 - திமுக வெற்றி
வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட ஓடைக்குப்பம் பகுதியை உள்ளடக்கிய 179ஆவது வார்டில், திமுக வேட்பாளர் கயல்விழி ஜெயக்குமார் (6,240), அதிமுக வேட்பாளர் ஜமுனா கணேஷனை (4,301) விட 1,939 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வார்டு 180 - திமுக வெற்றி
திமுக வேட்பாளர் விசாலாட்சி கபிலன் (6,194), அதிமுக சார்பில் போட்டியிட்ட ரேவதி குமரனை (2,477) விட 3,717 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்