ETV Bharat / state

‘நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் திமுக தனித்தே வெல்லும்’ - ஐ.பெரியசாமி

பொதுக்குழுவில் பேசிய திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, “நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் திமுக தனித்தே வெல்லும்” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் திமுக தனித்தே வெல்லும் - ஐ.பெரியசாமி

author img

By

Published : Oct 9, 2022, 7:54 PM IST

சென்னை: செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுக்குழுவில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய ஐ.பெரியசாமி, "பெரியார், அண்ணா, கருணாநிதி மூவரை ஸ்டாலினிடம் பார்க்கலாம். 50 ஆண்டுகாலம் உழைத்து திமுகவின் தலைவர் ஆகியிருக்கிறார் ஸ்டாலின்.

மக்கள் பணியில் கருணாநிதி போன்று உழைத்துக் கொண்டிருக்கும் தலைவர் தான் ஸ்டாலின். அப்படியெல்லாம் கடின உழைப்பின் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் போன்ற நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

நேரம் பொன்னானது என்று சொல்வார்கள் அதே போல ஸ்டாலின் உழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த உற்சாகத்தை பார்த்த அமைச்சர்களும் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பாஜக சேர்ந்தால் வெற்றி, அந்த கட்சி சேர்ந்தால் வெற்றி என கூறிக் கொண்டிருக்கின்றனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் திமுக தனித்தே வெல்லும். அடுத்த 20 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

ஒவ்வொரு மக்களுக்கும் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

இதையும் படிங்க: அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது! கொண்ட கொள்கைதான் பெரிது! - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.