ETV Bharat / state

திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் - பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவு - CM M K stalin

திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
author img

By

Published : Jan 14, 2023, 10:37 PM IST

சென்னை: திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். பொதுக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பொது வெளியில் ஆளுநர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகை தரப்பில் சென்னை காவல் ஆணையருக்கு வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக மேடையில் அநாகரீகமாக பேசினால் அது கண்டித்தக்கது என்றார். இந்நிலையில், திமுகவில் இருந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தற்காலிகமாக இடை நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் குறித்து திமுக நிர்வாகி அவதூறு பேச்சு; நீதிமன்றத்தை அணுக சென்னை காவல்துறை பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.