ETV Bharat / state

பகவத் கீதை பாடத்தை நீக்க வேண்டும்: கிண்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பகவத் கீதை பாடத்தினை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

dmk protest
author img

By

Published : Oct 1, 2019, 12:43 PM IST

Updated : Oct 1, 2019, 4:50 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற கல்வி ஆண்டில், பிஇ தகவல் தொழில்நுட்பம் பாடப் பிரிவு மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்தில் பகவத் கீதையை விருப்பப் பாடமாக சேர்த்து அண்ணா பல்கலை. அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து பகவத் கீதையை திணிக்க முயல்வது தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பகவத் கீதை திணிப்பை எதிர்த்து திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

மேலும், இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், ‘பகவத் கீதை கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவில்லை. மாணவர்கள் விருப்பப்பட்டால், இதனை தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம்’ என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், திமுக மாணவரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் அருகே, பகவத் கீதை பாடத்தை நீக்கக்கோரி மாநில மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன், ‘அண்ணா பல்கலைக்கழகம் பகவத் கீதையை பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும். தமிழ் தொன்மை மொழியான திருக்குறள் உள்ளபோது சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை மறைமுகமாக மத்திய அரசு திணிக்க முயல்கிறது’ என்று குற்றஞ்சாட்டினார்.

Intro:பகவத் கீதை பாடத்தை நீக்க வேண்டும்
திமுக மாணவரணி போராட்டம்

Body:சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பகவத் கீதை பாடத்தினை நீக்க வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் 4 வளாக கல்லூரியில் மட்டும் பயிலும் மாணவர்களுக்கு
வரும் கல்வி ஆண்டில் பிஇ தகவல் தொழில்நுட்பம் பாடப் பிரிவு மாணவர்களுக்கு விருப்ப பாடங்களில் தத்துவவியல் பாடத்தில் பகவத் கீதை மற்றும் சில தத்துவியல் அறிஞர்களின் தத்துவங்களையும் கற்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பகவத் கீதை கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவில்லை. மாணவர்கள் விருப்பப்பட்டால் வேறுபாட்டினை தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில் திமுக மாணவரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எழிலரசன் தலைமையில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுகவின் மாணவர் அணியில் உள்ளவர்களை வாகனங்களில் அழைத்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன், அண்ணா பல்கலைக்கழகம் பகவத் கீதையை பாடத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். தமிழ் தொன்மை மொழியான திருக்குறள் உள்ளபோது சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றைப் மறைமுகமாக மத்திய அரசு திணிக்க முயல்கிறது என குற்றம் சாட்டினார்.

Conclusion:
Last Updated : Oct 1, 2019, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.