ETV Bharat / state

"அதிமுக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது" - திருமண விழாவிலும் அரசியல் பேசிய  மு.க.ஸ்டாலின்! - முதலீட்டு மாநாடு வெள்ளையறிக்கை

சென்னை: பொருளாதார வீழ்ச்சியால் நாடு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெிரிவித்துள்ளார்.

dmk-stalin-talks-about-edapadis-foreign-tour
author img

By

Published : Sep 4, 2019, 7:35 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் ஆர்.பத்மநாபன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். இந்த திருமண நிகழ்வில் துரை முருகன், டி.ஆர்.பாலு, ஆர்காடு வீராச்சாமி உள்ளிட்ட திமுகவின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ஸ்டாலின்," இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக பத்திரிகைகளில் இது தான் செய்தியாக இருக்கிறது. மேலும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை மறைக்கத்தான், காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது போன்றவற்றை பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் முதலைமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாப் பயணம் போல் சென்றுள்ளனர். தற்போதைய அதிமுக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறி உள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.7 லட்சம் கோடி ரூபாய், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றிருக்கிறோம் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்கள்.

ஆனால் அதில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது? எத்தனை நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்திருக்கிறார்கள்? என்பது குறித்த வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். ஆனால் இதுநாள் வரையில் அதிமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.

இவையெல்லாம் வெற்று அறிவிப்புகளாகவே மட்டுமே உள்ளது. நாடு இப்படி மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து தமிழ்நாட்டையும் அதையும் தாண்டி இந்தியாவை காப்பாற்றவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

திருமண விழாவில் பேசிய ஸ்டாலின்

இப்படிப்பட்ட சூழலில் மக்களுக்கு திமுக பக்க பலமாக, உரிமையுடன் தட்டிக்கேட்கக் கூடிய பணியில் கலைஞரின் வழியில் திமுக பயணிக்கும் " என்று தெரிவித்தார்.

Intro:Body:*பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே, காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது போன்றவற்றை பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது சுற்றுலா அமைச்சரவையாக அதிமுக மாறி உள்ளதாகவும் கூறினார்.*

சென்னை அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் ஆர் பத்மநாபன் இல்லத் திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி ஆர் பாலு, அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கோபண்ணா உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

திருமண நிகழ்ச்சியில் பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது,*

திமுகவிற்கும், பத்மநாபனுக்கும் உள்ள உறவு 49 ஆண்டுகள், விரைவில் திமுகவில் பொன்விழா கொண்டாட உள்ளார் என்றும், திமுக பல சோதனைகளை சந்தித்து கொண்டிருந்த வேளையில், மிரட்டல்கள் வந்த நிலையிலும் எந்தவித அச்சமின்றி, அப்பழுக்கின்றி பணியாற்றியவர் அவர் என்றார். அதேபோல் அறிவாலயத்தில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பத்மநாபனும், ஜெயக்குமாரும் (து.மேலாளர்) எப்போதும் இருப்பார்கள் எனக் கூறினார்.

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து கீழே சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் ஊடகங்களில் வருகிறதா என்றால் வருவதில்லை, சமூக வலைதளங்கள் மூலமாக தான் வருகின்றது. ஊடகங்கள் இந்த செய்தியை மூடி மறைகின்றன.

அதுமட்டுமின்றி இதையெல்லாம் மறைக்கத்தான் , காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது போன்றவற்றை பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் தலைமையில் அமைச்சர் வெளிநாடு பயணம் சுற்றுலா பயணமாக உள்ளது. தற்போது சுற்றுலா அமைச்சரவையாக அதிமுக மாறி உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது முதலீட்டாளர்கள் மாநாடு , அதை தொடர்ந்து பழணிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இரண்டும் சேர்த்து 5லட்ச கோடி ஒப்பந்தம் என்று தெரிவித்துள்ளார்கள்.
அதை எல்லாம் எங்கே? வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தோம்.

எனவே தொடர்ந்து திமுக இது போன்ற பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பும். தற்போது இந்தியாவை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.