ETV Bharat / state

உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி: உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி கொடுக்க வேண்டும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

udhayanidhi
author img

By

Published : May 30, 2019, 3:10 PM IST

திருச்சி தெற்கு, வடக்கு திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், ’வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டமாக இது நடத்தப்படுகிறது.

திமுக செயற்குழு கூட்டம்

அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாக்காளர்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் வேளாண் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஓராண்டிற்கு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால்தான் அவரது பதவியேற்பு விழாவுக்குகூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறிதான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றிபெற முடியாத நிலையை உருவாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டாவில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். இளைஞர் அணியில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம். இந்த செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது’ என்றார்.

அதன்படி உதயநிதி ஸ்டாலினை இளைஞர் அணி பதவியில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணியில் பதவி வழங்க வேண்டும் என்று திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Body:திருச்சி: உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி கொடுக்க வேண்டும் என்று திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு வடக்கு திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டமாக இது நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாக்காளர்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் முடிவுக்குப் பின்னர் தான் வேளாண் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஓராண்டிற்கு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால் தான் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி தான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டாவில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். இளைஞர் அணியில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம். இந்த செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, கடுமையான தேர்தல் பணி ஆற்றிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலினை இளைஞர் அணி பதவியில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:ஜூன் 15ஆம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.