ETV Bharat / state

மத்திய அரசின் கூட்டணியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் - சென்னை செய்திகள்

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தும் திமுகவின் முயற்சிக்கு துணை நின்றிடக் கோரி, மத்திய அரசின் கூட்டணியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்
author img

By

Published : May 28, 2020, 6:15 PM IST

புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020ஐ திரும்பப்பெற வலியுறுத்தியும், மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் வகையில், திமுகவின் முயற்சிக்கு துணை நின்றிடக் கோரியும், மத்திய பாஜக அரசின் கூட்டணியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”திமுக தலைவர் என்கின்ற முறையில், மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பறிக்கும் ’புதிய மின்சார திருத்தச் சட்டம் - 2020’ஐ திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன்.

இத்தகைய நிலையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிக்கு தாங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.