திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் கடந்த பத்து நாள்களுக்கு மேல் தொடர்ந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
அந்த வகையில், இன்று (மார்ச் 31) ரங்கநாதபுரம் பகுதியில் வீடு வீடாக நடந்துசென்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.