சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. இந்தநிலையில், இன்று(மே.6) தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன. அதில், அமைச்சராகப் பதவியேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான 33 பேரில் எட்டு பேர் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் ஆவர். தற்போது, இவர்களில் சிலர் ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த எட்டு பேரும் அதிமுகவிலிருந்து விலகி வந்திருந்தாலும், தற்போது திமுக வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தனர். ஒருவேளை அதற்காக இவர்கள் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுகவினர் விவரம்:
1. செந்தில் பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
2. எஸ்.ரகுபதி - சட்டத்துறை
3. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை
4. அனிதா ராதாகிருஷ்ணன் - மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை
5. ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை
6. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
7. சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை
8. முத்துசாமி - வீட்டு வசதித்துறை
இதையும் படிங்க: திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு