ETV Bharat / state

திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை! - நாகல்கேணியில் திமுக பிரமுகர் கொலை

சென்னை: குரோம்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்த அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தீவிரமாகld தேடிவருகின்றனர்.

திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை
திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை
author img

By

Published : Feb 2, 2021, 11:51 AM IST

சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வட்ட துணைச் செயலாளர் கணேசன். இவர், தனது வீட்டின் வெளியே நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதனைக் கண்ட அவரது உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சையிலிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் காவல் துறையினர், நிகழ்விடத்தின் அருகே இருக்கும் கடை, வீடுகளில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அங்கு வந்த பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் விசாரணை நடத்தினார்.

உயிரிழந்த திமுக பிரமுகர் மீது எந்த ஒரு வழக்கும் இல்லாத நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கொலை செய்திருப்பதால் கொலையாளிகள் பிடிபட்டால் தான் காரணம் தெரியவரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏரல் உதவி ஆய்வாளரை கொலை செய்த நபர் நீதிமன்றத்தில் சரண் - 10 நாள் நீதிமன்ற காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.