ETV Bharat / state

கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர் - திமுக

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக ஐடி விங்க் அமைப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர்

author img

By

Published : Jul 13, 2022, 3:46 PM IST

சென்னை: வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தின் மூன்றாவது வாயில் அருகே திடீரென ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை 176 வது வார்டு திமுக ஐடி விங்க் அமைப்பாளர் சதீஷ் என்பது தெரியவந்தது. மேலும் 176 வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் தன்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், தற்பொழுது வேலை வாங்கி தராமல் ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர்

கவுன்சிலர் ஆனந்திடம் தான் கொடுத்த பணத்தை கேட்ட போது, மாவட்ட செயலாளருக்கு பணத்தை செலவு செய்துவிட்டதாகவும் இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பணத்தை தர மறுத்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது பணத்தை மீட்டு கொடுக்கும் படி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று மீண்டும் கவுன்சிலர் ஆனந்தம் அடியாட்களுடன் வந்து வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து தீக்குளிக்க முயன்ற சதீஷை வேப்பேரி போலீசார் அழைத்து சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணின் தலையில் அடித்த அமைச்சர்; எதிர்கட்சிகள் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.