ETV Bharat / state

"வட மாநிலத்தினருக்கு எதிராக திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை" - அமைச்சர் துரைமுருகன்! - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை என்றும், இது தொடர்பாக சிலர் சிறுபிள்ளைத் தனமாக குற்றம்சாட்டுகிறார்கள் என்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

DMK
DMK
author img

By

Published : Mar 7, 2023, 4:39 PM IST

அமைச்சர் துரைமுருகன் பேட்டி

திருச்சி: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று(மார்ச்.7) சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அண்ணாமலை என்னிடம் சவால் விடவில்லை, அதனால் நான் அவரை கைது செய்யமாட்டேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுகவின் திட்டமல்ல, அது மத்திய அரசின் திட்டம். மாநில அரசு மட்டும் அதற்கு நிதி ஒதுக்கினால் பத்தாது, மத்திய அரசும் உதவி செய்திட வேண்டும். பல மாநிலங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டிய நல்ல திட்டம் இது" என்றார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களைதான் திமுக இப்போது தொடங்கி வைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு, "பொதுவாக ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தொடரப்பட்ட பல திட்டங்கள் நிறைவடைவதற்கு முன்பே அவர்கள் ஆட்சி மாறி புதிய கட்சி ஆட்சி அமைக்கும்போது, மக்களின் வரிப்பணத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட அந்த திட்டங்களை ஆட்சியில் இருக்கும் கட்சி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் மாண்பு. தாமிரபரணி கருமேனியாறு திட்டத்தை திமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக, அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிதி ஒதுக்கி அந்த பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காவிரி குண்டாறு திட்டத்தில் தன்னிச்சையாக செயல்பட முடியாது, இதை கடன் வாங்கியும் செய்வதற்கான நிலை இருப்பதால் நிதானமாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.

மேலும், "வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையானது, ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் ஏற்படுத்தியது. மூன்றாவது அணி உருவாகாமல், இரண்டு அணியோடு இருக்க வேண்டும் என்ற கலைஞரின் நோக்கத்தை முறியடிக்கும் விதமாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே இதில் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, யார் இதை செய்கிறார்களோ அவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

வட மாநிலத்தவர்கள் மீது திமுக தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்ததால்தான் வடமாநிலத்தவர் தாக்குதல் தொடர்பான பிரச்சனை எழுந்ததாக பாஜக குற்றச்சாட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் ஒருபோதும் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை, பிரசாரத்தில் மட்டும்தான் ஈடுபடுகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நுண்துளை சிகிச்சை மூலம் பக்கவாதத்தில் இருந்து மீண்ட இளைஞர் - மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சு. பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.