இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினருக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் பொருட்டும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.