ETV Bharat / state

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் என்கவுன்டர் நடக்கிறது -கனிமொழி கண்டனம்

சென்னை: குற்றங்களுக்கு எதிரான என்கவுன்டர் பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் நடத்தப்படுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

kanimozhi
kanimozhi
author img

By

Published : Dec 7, 2019, 7:14 PM IST

திமுக மகளிர் அணி கூட்டம் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், கல்லூரியில் மாணவி தற்கொலைகளை தடுக்க வலியுறுத்தியும், நிர்பயா நிதியை பயன்படுத்தாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மொத்தம் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி எம்.பி.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம். இங்கு சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக அரசு நிர்பயா நிதியை பயன்படுத்தாதது, அவர்கள் பெண்கள் பாதுகாப்பு மேல் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது. வெங்காய விலை உயர்வை பற்றி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் பேச்சு, அவர் நடுத்தர, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் வைத்துள்ள பார்வையையும், அவரது மனநிலையை நன்கு வெளிப்படுத்துகிறது.

குற்றங்களுக்கெதிரான என்கவுன்டர் பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் நடத்தப்படுகிறது. இதுவே வசதி, பதவியில் இருப்பவர்கள் மேல் என்கவுன்டர் நடக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

என்கவுன்டர்க்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக பாலியல் குற்றத்தில் ஈடுப்படும் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

உத்தரப் பிரதேசத்தில் பெண் எரிக்கப்பட்ட விவகாரத்தை மக்களவையில், எதிர்கட்சிகள் எழுப்ப முயன்றபோது பாஜக திட்டமிட்டு அதை தனிப்பட்ட பிரச்னைகளை போன்று திசைதிருப்பினர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்கும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் வீழ்வேன் என நினைத்தார்கள், அது நடக்காது - ப. சிதம்பரம்

Intro:Body:திமுக மகளிர் அணி கூட்டம் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை தனியார் விடுதியில் நடைப்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் தேசிய கல்வி கொள்கை எதிர்த்தும், கல்லூரியில் மாணவி தற்கொலைகள் தடுக்க வலியுறுத்தியும், நிர்பையா நிதியை பயன்படுத்தாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மொத்தம் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் திமுக மகளிர் அணி செயலாளர் எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம்.

மேலும் இங்கு சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றியுளோம் என தெரிவித்தார். குறிப்பாக பெண்களுக்கான 33℅ இடஒதுக்கீடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். அதிமுக அரசு நிர்பையா நிதியை பயன்படுத்ததது அவர்கள் பெண்கள் பாதுகாப்பு மேல் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது.

வெங்காய விலை உயர்வை பற்றி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனின் பேச்சு அவர் நடுத்தர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் வைத்துள்ள பார்வை மற்றும் அவரது மனநிலையை நன்கு வெளிப்படுத்துகின்றது.

குற்றங்களுக்கு எதிரான என்கொண்டர் பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தான் நடத்தப்படுகின்றது. இதுவே வசதி, பதவியில் இருப்பவர்கள் மேல் என்கொண்டர் நடக்குமா என்ற கேள்வி எழுகின்றது. என்கொண்டர்க்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நிச்சியமாக பாலியல் குற்றத்தில் ஈடுப்படும் குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

உத்தர் பிரதேசத்தில் பெண் எரிக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப முயன்ற போது பிஜேபி திட்டமிட்டு அதை தனிப்பட்ட பிரச்சனைகளை போன்று திசைதிருப்பினர் என குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அந்த பென்களுக்கு நியாயம் கிடைக்கும் என தெரிவித்தார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.