ETV Bharat / state

'சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' - சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வு

சென்னை: சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகளை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

DMK MP Kanimozhi
திமுக எம்பி கனிமொழி
author img

By

Published : Sep 18, 2020, 9:29 AM IST

இதுதொடர்பாக கனிமொழி தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: '10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்த தமிழ்நாடு அரசு, 'சிறப்புக் குழந்தைகள்' மற்றும் 'மாற்றுத் திறன்' மாணவர்களை கரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்.

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு, 'சிறப்புக் குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்' தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித்தேர்வுக்கான மதிப்பெண் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்புக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் சுமார் 1000 பேருக்கு வரும் திங்கள்கிழமை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி அக்குழந்தைகளின் பெற்றோர்கள், மாற்றுத்திறனாளி நலன் ஆணையரை சந்தித்தனர். அப்போது தங்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

கரோனா பீதி இருக்கும் இந்த நேரத்தில் தங்கள் குழந்தைகள் தேர்வு எழுத சென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால் சிறப்புக் குழந்தைகளான அவர்களை கவனித்துக்கொள்வதென்பது மிகவும் கடினமான விஷயமாகும் என்று பெற்றோர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இருப்பினும், சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மதிப்பெண் வரையறை முறையானது, பிரதான கல்வியிலிருந்து மாறுபட்டதாக இருப்பதால் தேர்வை ரத்து செய்ய முடியாது என அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மற்ற மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்ததைப்போல் சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விரைவில் மெரினாவில் அமையவுள்ள ’நம்ம சென்னை’ எழுத்து வடிவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.