சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
![மருத்துவமனை அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7478601_anbu.jpg)
இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜெ.அன்பழகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. வென்ட்டிலேட்டர் மூலம் 80 விழுக்காடு ஆக்சிஜன் கடந்த 24 மணி நேரமாக வழங்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரமாக அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ - ஆவின் நிர்வாகம்