ETV Bharat / state

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக எம்எல்ஏ பூங்கோதை!

author img

By

Published : Nov 20, 2020, 7:31 PM IST

சென்னை: உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என்னை, தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை செய்துவருகிறது என திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா குற்றம்சாட்டியுள்ளார்.

பூங்கோதை
பூங்கோதை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. சட்டப்பேரவை விவாதத்தின்போது, துணிச்சலாக சபாநாயகரை எதிர்த்து கேள்வி கேட்பவர். இச்சூழலில், நேற்று திடீரென உடல்நிலை சரியில்லாமல் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகளவில் மருந்து உட்கொண்டதால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பூங்கோதை உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின.

அனைத்து வதந்திகளுக்கும் முற்றப்புள்ளி வைக்கும் விதமாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 19ஆம் தேதி, ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்த என்னை பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு - சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

15 ஆண்டுகள் அரசியலில் கருணாநிதி என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது எவ்வாறு அவர் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல ஸ்டாலினும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டப்பேரவை உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்

தற்போது நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு - சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க.

ஆகவே எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி - என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும் - என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.