ETV Bharat / state

தாயார் மறைவு - முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்! - duraimurugan and ponmudi

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் தாயார் மறைவிற்கு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்!

author img

By

Published : Oct 19, 2020, 11:05 AM IST

Updated : Oct 19, 2020, 1:10 PM IST

முதலமைச்சர் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.19) காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாள் படத்திற்கு, மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியும் முதலமைச்சருக்கு நேரில் ஆறுதல் கூறினர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், கடந்த 12ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்குப் புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சர் தாயார் மறைவிற்கு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்!
முதலமைச்சரின் தாயார் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின்!

சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதனை முடித்துக்கொண்டு நேற்று(அக்.18) மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.

முதலமைச்சரிடம் நேரில் ஆறுதல் தெரிவிக்கும் ஸ்டாலின். உடன் துரைமுருகன், பொன்முடி!

முதலமைச்சர் தாயாரின் மறைவு குறித்து, ஏற்கனவே தொலைபேசி மூலம் ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று முதலமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

Last Updated : Oct 19, 2020, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.