ETV Bharat / state

கிரிக்கெட் வாரிய தலைவரான திமுக அமைச்சர் மகன்.. அமித்ஷாவின் மகன் காட்டிய அனுசரணை.. - பொன்முடி மகன் அசோக் சிகாமணி தலைவராகத் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ யின் தலைவருமான ஜெய் ஷாவின் ஆதரவாலும், முன்னாள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் ஆதரவாலும் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வாரிய தலைவரான திமுக அமைச்சர் மகன்

author img

By

Published : Nov 6, 2022, 7:11 AM IST

தமிழக மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகள் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் சீனிவாசன். சீனிவாசன் போன்ற பிராமணர்கள் மட்டுமே கோலோச்சிய இடத்தில் இந்த முறை பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அளவில் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 1932ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெருமைமிக்க இந்த சங்கத்தின் தலைவர், உதவி செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று காலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பிறகு பிரபு என்பவர் தனது வேட்பு மனுவை திரும்பப்பெற்றார். இதனால் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி
அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி

கிரிக்கெட் சங்கங்களைப் பொறுத்தவரைச் சூதாட்ட புகார்களுக்கும் பஞ்சமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கிய போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை தங்கள் வசம் வைத்திருந்த இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் குடும்பம் சிக்கியது. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் வசமாக மாட்டினார். கிரிக்கெட் சங்க பதவிகளைக் குறிப்பிட்ட நபர்கள் பரம்பரை சொத்தாக ஆண்டு அனுபவிப்பதைத் தடுக்கும் வகையில் லோதா கமிட்டி சில பரிந்துரைகளை வழங்கியது.

தற்போது அனைத்து கிரிக்கெட் சங்க தேர்தல்களிலும் லோதா கமிட்டி பரிந்துரைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பரிந்துரைகளில் மிக முக்கியமானது பதவிகளில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது தொடர்பானது. இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உருவானது.

இதனால் 2019-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் கிரிக்கெட் சங்க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தலைவர் பதவிக்கு மிக முயற்சித்தவர் தற்போதைய அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி.

ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முகமாக இருக்கும் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் தரப்பின் சமாதான முயற்சிகளில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக அசோக் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியைச் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். அப்போது இருந்து தலைவர் பதவியானது காலியாக இருந்தது.

லோதா கமிட்டி பரிந்துரைப்படி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்தில் பொறுப்பில் இருக்கும் அசோக் சிகாமணி தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற சூழல் ஏற்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ தலைவராக உள்ளார்.

பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா
பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா

ஜெய்ஷாவின் ஆதரவும் அனுசரணையும் இருப்பதால் அசோக் சிகாமணி தேர்தலில் போட்டியிட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும் சங்கத்தில் மொத்தம் 177 பேர் ஓட்டுப் போடும் உரிமையுள்ளவர்களாக உள்ளனர். இதில் ஒரு ஓட்டுக்கு 15 லட்சம் வரை பேரம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர்,“தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக எம்.ஏ.எம். ராமசாமி தலைவராக இருந்த போது ஓரளவு பரவாயில்லை. ஆனால், இந்தியா சிமெண்ட் சீனிவாசன் வந்த பிறகு இவரை அசைக்க முடியவில்லை. சுமார் 15 முறை மீண்டும், மீண்டும் இவரே தலைவரானார். பிறகுத் தன் மகளைத் தலைவராக்கினார். தற்போது தலைவராகத் தேர்வாகியுள்ள அசோக் சிகாமணியால் சீனிவாசனை மீறி எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

சீனிவாசன்
சீனிவாசன்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் உள்ள மொத்த ஓட்டில் 50 ஓட்டுக்கள் பிராமண ஓட்டுகள் ஆகும். இவர்களின் முழுமையான ஆதரவு சீனிவாசன் ஆதரவுடன் அசோக் சிகாமணிக்குச் சென்றுள்ளது. அத்துடன் அமைச்சரான பொன்முடியின் மகன் என்பதால் திமுகவின் ஆதரவும் கிடைத்துள்ளது. மேலும் இவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன் வராத காரணத்தால் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு - அர்ஜுன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.