ETV Bharat / state

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது  - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை எதிர் கொள்ள முடியாத திமுக தலைவர், சபாநாயகர் மூலம் அதிமுகவிற்கு எதிராக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் கொல்லைப்புறமாக சபாநாயகர் மூலம் அதிமுகவிற்கு எதிராக செயல்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

author img

By

Published : Oct 18, 2022, 1:26 PM IST

Updated : Oct 19, 2022, 7:39 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதனையடுத்து ஈபிஎஸ் உள்பட அவரது தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “பேரவையில் இன்று சபாநாயகர் நடந்து கொண்ட முறை அதிமுகவிற்கு எதிரானது. அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர், கொல்லைப்புறமாக சபாநாயகர் மூலம் அதிமுகவிற்கு எதிராக செயல்படுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக இன்று திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குழுவில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பும் சபாநாயகர் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அந்த தீர்ப்புக்கு மாறாகவே செயல்படுகிறார். மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருக்கக்கூடிய ஏக்நாத் ஷிண்டேக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் அவர் ஏற்கப்பட்டுள்ளார். அதேபோல் 62 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி மற்றும் சட்டப்பேரவையில் பிற பதவிகள் மாற்றம் செய்யப்பட்டு, நாங்கள் அளித்த கோரிக்கைகள் சபாநாயகர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திமுக, சபாநாயகர் மூலம் அதிமுகவை பழிவாங்குகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம், ஜெயலலிதா மரணம் குறித்த ஆணையம் என இதனை அமைத்தது நாங்கள்தான். எனவே நாங்கள் அதனை பார்த்து பயப்படவில்லை. மக்கள் மத்தியில் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை போக்கும் வகையில், திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை என்றும் இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு உள்பட மக்கள் பல்வேறு பிரச்னைகளால் சிக்கி தவிக்கின்றனர். அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் முதலமைச்சர் என்ன செய்து வருகிறார் என்று தெரியவில்லை?

அரசையும் கட்சியையும் திறம்பட நடத்த முடியாமல் முதலமைச்சர் தமிழ்நாட்டில் எப்படி செயல்பட்டு மக்களை பாதுகாப்பார்? இதன்மூலம் அவரது திறமையின்மை வெளிப்படுகிறது. இந்த ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். முதலமைச்சர் தூக்கமின்றி தவிப்பதாக கூறுகிறார்.

ஆனால் திமுக எப்போது ஆட்சி அமைத்ததோ, அப்போது முதலே மக்கள் தூக்கத்தை இழந்து விட்டார்கள். திமுகவின் பிடியாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. திமுக ஆதரவுடன் ஓபிஎஸ் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினார். அது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தவில்லை.

நாங்கள் உயர் நீதிமன்றம் சென்று புகார் அளித்து, அதன் பின்னர் நினைவூட்டல் கடிதம் அளித்து, அதன் பின்னரே அதிமுக அலுவலகம் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிக்கு இந்த நிலைமை என்றால், சாமானிய மக்கள் புகார் அளித்தால் எவ்வாறு விசாரணை நடக்கும் என்பது இங்கு வெட்ட வெளிச்சமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை விசாரிக்க வேண்டும் - ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

Last Updated : Oct 19, 2022, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.