காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (டிச. 09) தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் விவசாயிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டும், கரோனா வைரஸைக் கருத்தில்கொண்டும் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "இந்திய தேசிய காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு திமுக சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்து நவீன இந்தியாவை கட்டமைத்ததிலும், முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், சமூக சேவைகளில் அவரது பணி தொடர வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிறந்தநாள் கொண்டாட வேண்டாமென முடிவெடுத்த சோனியா காந்தி!