ETV Bharat / state

இனி விபத்துகள் நடக்காது என்பதை அனல்மின் நிலையம் உறுதி செய்யவேண்டும்- ஸ்டாலின்

author img

By

Published : Jul 1, 2020, 5:21 PM IST

சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை உறுதி செய்வதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காது என்பதை உறுதி செய்யவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

dmk leader stalin urge to nlc india limited to no more accident held in  thermal power station

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையத்தின் 5ஆவது யூனிட்டில் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று இன்று (1.7.2020) காலை திடீரென வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

விபத்திற்கான காரணம் குறித்து அனல்மின் நிலையத்தில் அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் விபத்தில் யாரேனும் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அனல்மின் நிலைய முதலுதவிக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் ஆறு தொழிலாளர்கள் மரணமடைந்தும் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். மறைந்தவர்களுக்கு அஞ்சலி! காயமடைந்தவர்களுக்கு என் ஆறுதல்!

நெய்வேலி அனல்மின் நிலையம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை உறுதி செய்வதுடன், இனி ஒரு தொழிலாளியும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்திட வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.