ETV Bharat / state

கொஞ்சம் கூட சிந்தனை இல்லாத அரசால் மக்களுக்கு என்ன பயன்? - திமுக தலைவர் ஸ்டாலின் - சென்னை மாவட்டச் செய்திகள்

சென்னை: கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், 'எல்லாம் சரியாகி விட்டது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

dmk leader stalin
dmk leader stalin
author img

By

Published : May 6, 2020, 9:17 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அச்சம் தருவதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பீதியை ஏற்படுத்துவதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தினந்தோறும் செய்யப்படும் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கையைத் தமிழ்நாடுஅரசு வெளியிடுகிறது. இதனை மொத்த எண்ணிக்கையாக மட்டுமில்லாமல், மாவட்ட வாரியாக எவ்வளவு பேருக்கு அன்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டது என்பதையும் அரசு விளக்கமாக வெளியிட வேண்டும்.

ஆரம்பத்தில் கரோனா நோய்த் தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் இப்போது பரவி வருவதாக எண்ணிக்கைகள் காட்டுகின்றன என்றால், எப்படிப் பரவியது? அல்லது, பல மாவட்டங்களில் அப்போது பரிசோதனையே செய்யாமல் இப்போது செய்வதால் வெளியில் தெரிய வருகிறதா? என்பதையும் அரசு விளக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அரசு அறிவிக்கும் போதெல்லாம், 'எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்தீர்கள்?' என்ற கேள்வியை நான் எழுப்பி வந்தேன்.

எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே எடுங்கள், முன்கூட்டியே மக்களுக்கு அறிவியுங்கள் என்பதையும் சொல்லி வந்தேன். மார்ச் 24ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், பெருங்களத்தூர், தாம்பரம் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதும், ஏப்ரல் 25ஆம் தேதி கோயம்பேடு காய்கறி அங்காடியில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதும், அரசாங்கத்தின் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் இருந்த மெத்தனமும் அலட்சியமுமே தவிர, மக்களைக் குறை சொல்ல முடியுமா?

இன்றைக்கு 'கோயம்பேடு' மீது முழுப் பழியையும் போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கில் கூடியதும், தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மொத்த மற்றும் சிறுவியாபாரிகளை தனிமனித இடைவெளி இல்லாமல் கூட விட்டதும்தான் அரசாங்கம் செயல்படும் அழகா? சென்னை மாநகரத்தில் காவல்துறை ஆணையரகம் இருக்கிறதா? அல்லது அதுவும் மூடி சீல் வைக்கப்பட்டு விட்டதா?

மே 1ஆம் தேதி சென்னைக்கு எனச் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல வாரியாக ஐ.பி.எஸ். அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 19ஆம் தேதியில் இருந்தே அதிகமாகி வந்தது. அப்போதே சிறப்பு அலுவலரை நியமித்திருக்க வேண்டும். கரோனா கட்டுக்கடங்காமல் ஆன பிறகு கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு அலுவலரைப் போடுவதால் என்ன பயன்?

அதோடு, வரும் 7ஆம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளது அரசு. அப்படியானால் ஊடரங்குக்கு உண்மையான பொருள் என்ன என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும். அரசுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னால் கோபம் வருகிறது. ஆனால் இதுபோன்ற சிறு விஷயங்களில் கூட அக்கறையும், சிந்தனைத் திறனும் இல்லாததாக தமிழ்நாடு அரசு இருப்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது.

இத்தகையச் சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் செய்து, 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நினைக்கிறது. கரோனா கட்டுக்குள் வரவில்லை என்பதையே நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை காட்டுகிறது. அரசின் தளர்வு, இந்த எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடாது.

மக்களைக் காக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அரசியல் உள்நோக்கமற்று, தீர ஆலோசித்து, பலதரப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, விரைந்து சிந்தித்து ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், அறியாமையால், ஆணவத்தால் இழந்துவிடக்கூடாது" என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.