ETV Bharat / state

தமிழ்நாடு முதலீடுகளுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? ஸ்டாலின் தாக்கு!

author img

By

Published : Dec 29, 2020, 2:19 PM IST

சென்னை: முதலீடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளுத்துவிட்ட நிலையில், முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

dmk leader stalin slams admk govt on tn investment proposals

அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 9.4 விழுக்காடு மட்டுமே முதலீடுகளை ஈர்த்துள்ளது என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நூற்றுக்கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம்.

கோடிக் கணக்கில் முதலீடுகளை ஈர்த்து விட்டோம் என்று திரும்பத் திரும்பப் பொய்களையே சொல்லி வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது முகமூடியை, நேற்று (டிச. 28) வெளியான தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் பெங்களூருப் பதிப்பு கழற்றி வீசியுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முதலீடான 1 லட்சத்து 90 ஆயிரம் கோடியில் பெற்றது வெறும் 9.4 சதவீதம் மட்டும்தான். அதாவது வெறும் 18 ஆயிரத்து 188 கோடிதான் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆகவே கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடுகள், ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டிற்குக் கூட்டமாகப் படையெடுத்தது, உள்ளிட்ட நாடகங்களின் மூலமாக இதுவரை போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் வெத்து வேட்டு! எல்லாமே வீண் விளம்பரம் என்பது நிரூபணமாகி விட்டது.

கரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்த்ததில் முதல் மாநிலம் என்று அரசுப் பணத்தில் அதாவது மக்களின் வரிப் பணத்தில், பத்திரிகைகளில் இன்று இரண்டு முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமியின் சாயம் வெளுத்து விட்டது.

இந்நிலையில், முதலீடுகளை ஈர்க்க வழி இல்லாத இந்த அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா காலத்திலும் ரூ.24,500 கோடி முதலீடு, 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு' - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.