ETV Bharat / state

கரோனா 2ஆம் அலைக்கு நடுவே பள்ளிகள் திறப்பா? - ஸ்டாலின் கண்டனம் - reopening of schools and colleges

சென்னை: கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வருவதற்கான வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

DMK leader stalin condemning on reopening of schools and colleges

author img

By

Published : Nov 3, 2020, 3:03 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்குப் பள்ளிகள் வரும் 16ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார். இது மாணவர்களின் பாதுகாப்பினை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.

அறிவிப்பினைக் கண்டதிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவருமே மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது, விடுதி மாணவர்களுக்கான தங்கும் வசதி, உணவு ஏற்பாடுகளுக்கான எச்சரிக்கை, பாதுகாப்பை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்த அச்சத்திலும், பதற்றத்திலும் தவிப்பதைக் காண முடிகிறது.

அதிலும் குறிப்பாக கரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்று உலக சுகாதார அமைப்பே எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எழுவதை முதலமைச்சர் உணராமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

பள்ளிகள் திறக்கப்படும்போது, முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், தொடர் உடல் பரிசோதனை, அடிக்கடி கைக்கழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் எந்த அளவிற்குச் செயல்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

ஏனென்றால் இதுவரை ஊரடங்குகளில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் இந்த முன்னெச்சரிக்கை வழிமுறைகள் தினம் தினம் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களை கரோனா ஆபத்திலிருந்து காப்பதுதான் அரசின் முதல் கடமை.

பள்ளிகளுக்கு வரச் சொல்லி விட்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் செய்ய முடியாமல்போனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமே ஆபத்தாக முடியும் என்று கல்வி வல்லுநர்களே எச்சரிக்கிறார்கள்.

பள்ளிகளைத் திறக்கப் போகிறோம் என்ற அறிவிப்பில் அதிமுக அரசின் நிர்வாகக் குழப்பமே தலைதூக்கி நிற்கிறது. வடகிழக்குப் பருவமழை, அதன் விளைவாக ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகள், பருவகால நோய்கள் அனைத்தும் கரோனா தொற்றுடன் சேர்ந்து, மாணவர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தினை விளைவிக்கக் கூடும் என்பது மருத்துவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். போன்றோரின் கவலையாக உள்ளது.

ஆனால் முதலமைச்சர் ஆய்வு என்ற பெயரில் கூட்டம் போடுகிறாரே தவிர, இந்தக் காலக்கட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதில் இருக்கும் பாதகத்தைப் பற்றியும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உள்ள சங்கடத்தைப் பற்றியும் கருத்தில் கொண்டு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருமே, நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வுசெய்து, பள்ளிகளைத் திறக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

பத்திரிகைகளிலும் அந்தச் செய்திகள் வெளிவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன. இவற்றை எல்லாம் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல், ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை.

ஆகவே மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முதலமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். அனைவரின் நலன், பாதுகாப்பு கருதி பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திட வேண்டும்.

நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பினை நிறுத்திவைத்து, மாற்று அறிவிப்பினை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகப் பரவலாக ஏற்பட்டிருக்கும் மனப் பதற்றத்தை நீக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.