முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ஆம் தேதி உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனால் முதலமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று (அக்.18) சேலத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
இதையும் படிங்க...முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்