ETV Bharat / state

20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்; தேமுதிகவுக்கு கதவடைத்த ஸ்டாலின்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக, ஸ்டாலின், விஜயகாந்த்
author img

By

Published : Mar 7, 2019, 3:41 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்குமா இல்லை அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருந்தது. நேற்று அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயத்தில் திமுகவுடனும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தேமுதிகவுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி என ஒரு காலத்தில் சொல்லிவந்த விஜயகாந்தின் கட்சி தற்போது ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடனும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுக, ஸ்டாலின், விஜயகாந்த்

இதற்கிடையே, தன்னை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது தொடர்பாக துரைமுருகன் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக சேர்த்துக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால் தேமுதிகவுக்கான அறிவாலயம் கேட் மூடப்பட்டுவிட்டதால் அடுத்ததாக ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலக கேட்தான் தற்போது தேமுதிகவுக்கு இருக்கும் ஒரேவழி என கருதப்படுகிறது.

முன் போல் தேமுதிக இல்லாததால் அக்கட்சி தனித்து போட்டியிட யோசிக்கும். எனவே தற்போது அதிமுக கொடுக்கும் சீட்டுகளை வாங்கி கொள்ள வேண்டிய நிலையில் அக்கட்சி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Intro:Body:

content

‘என் இறப்பையும் எதுகை மோனை செய்வீர்கள்!’ - விகடன் மீது சீனு ராமசாமி பாய்ச்சல்

என் இறப்புச் செய்தி வந்தாலும் அதைவைத்து, ‘சீனு சாவு’ என எதுகை மோனை செய்வார்கள் என விகடன் நிறுவனத்தின் மீது சீனு ராமசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சீனு ராமசாமியின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த திரைப்படம், கண்ணே கலைமானே. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். படம் வெளியாகி விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் படத்திற்கு இதுவரை வந்த எல்லா விமர்சனங்களையும் பார்த்து விட்டேன். விமர்சனங்களை வணங்கி ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஆனந்த விகடன் மட்டும் என்னை கேலி செய்கிறது. வஞ்சனை வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்து என் கலைவாழ்வை கொலை செய்ய நினைக்கிறது. நையாண்டி செய்கிறது. ஒருமையில் அழைக்கிறது” என மிகவும் வருத்தமாக பதிவிட்டுள்ளார்.

மேலும், அதே பதிவில், இனி விகடனுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என கூறியுள்ள சீனு ராமசாமி, என் இறப்புச் செய்தி வந்தால், அதை வைத்தும் ‘சீனு சாவு’ என எதுகை மோனை போட்டு எழுதுவீங்க பாஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகை நிறுவனமாக அறியப்படும் விகடன் மீது இயக்குநர் சீனு ராமசாமி இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.