மறைந்த திமுக தலைவரின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது உடன் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கருணாநிதி நினைவிடத்தில் ஒரு தம்பதியருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலை, கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர் ம.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 41 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் - கலைஞரை வசைபாடும் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்!'