ETV Bharat / state

கிராம சபை  விவகாரம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - village panchayath

சென்னை: கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்எல்ஏ நேரு தாக்கல் செய்த மனுவுக்கு மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dmk kn Nehru file Tom confection village panchayath meetings, notice to state, MHC

author img

By

Published : Nov 5, 2020, 4:19 PM IST

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டங்கள், கரோனா தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டன.

இதை எதிர்த்து திமுக எம்எல்ஏ நேரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ”சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், சட்டங்களுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததால், கிராமசபை கூட்டங்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் விதிகளின்படி ஆண்டுக்கு இரண்டு முறை கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதால் மூன்று வாரங்களில் கிராமசபை கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கிராம சபை கூட்டங்களை ரத்து செய்த உத்தரவை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன்,ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று (நவ. 5) விசாரணைக்கு வந்தபோது, விதிகளின்படி கிராம சபை கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்க கிராம சபை தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.

அதேசமயம், நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிக்க பஞ்சாயத்து ஆய்வாளரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கரோனா தொற்று பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தனி மனித விலகல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்றால், டாஸ்மாக் கடைகளில் தனி மனித விலகல் பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்ய அதிகாரம் உள்ள நிலையில், குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...திருப்பத்தூர் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.