ETV Bharat / state

''அரசு ஊழியர்கள் மீது வன்மத்தோடு செயல்படுவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்''

ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மீது வன்மத்தோடு செயல்படக் கூடியதை தமிழ்நாடு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 26, 2023, 7:42 PM IST

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படியை உரிய காலத்தில் உடனடியாக வழங்குவது, சரண் விடுப்பை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசன், "இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமும் அதன் தலைமையில் செயல்படக்கூடிய 64 துறை சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய அழைப்பை ஏற்று இரண்டு மாநாடுகளில் பங்கேற்ற முதலமைச்சர் நான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை மறக்க மாட்டேன், மறைக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன் என்று கூறினார். அந்த நம்பிக்கையோடு லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ மாநாட்டை நடத்தி, அதிலும் உங்களில் ஒருவன் உங்களால் தான் ஆட்சிக்கு வந்தேன் என்று முதலமைச்சர் கூறினார்.

ஆனால், இந்த 2 ஆண்டு கால கட்டத்தில் அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எந்த வாக்குறுதியினையும் நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கக் கூடிய அரசாக மாறி வருகிறது.

அதிமுக ஆட்சியில் கரோனாவைக் காரணம் காட்டி சரண்விடுப்பு உள்ளிட்டவைகளைப் பறித்தார்கள். திராவிட மாடல் என்ற மாயையை உருவாக்குகின்ற ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தபோது பழைய பென்ஷன் தான் உங்களுக்கு வாழ்வாதாரம் என்று தற்போதைய முதலமைச்சர் கூறினார். ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் நம்பிக்கை துரோகத்தை விளைவித்துவிட்டார். எல்லாத் துறைகளிலும் கொடுமையை அனுபவித்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 30,000 பேர் கோவில்களில் அன்னதானம் வாங்கிக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். திராவிட மாடல் என்று கூறியும், ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்போம் என கூறியும் ஒன்றிய அரசை விட தூக்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு இந்திய நாட்டிற்கே வழிகாட்டுகிற அளவிற்கு ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மீது வன்மத்தோடு செயல்படக் கூடியதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இனி சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எல்லாத் துறைகளையும் அத்தக் கூலியாக மாற்றி விட்டார்கள். திராவிட மாடல் என்பது அத்தக் கூலிகள் உருவாகக்கூடிய மாடலாக எல்லா துறைகளிலும் நான்கு பேர் பார்க்க வேண்டிய வேலைகளை ஒரு ஆள் பார்க்கிறார்கள். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் ரீதியாக பட்டறிவு தேவை. அரசு ஊழியர்கள் இந்த ஆட்சிக்கும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாடம் புகட்டுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்டர் மீடியனில் மோதி மாநகரப் பேருந்து விபத்து; 5 பயணிகள் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.