ETV Bharat / state

திமுக பொருளாளர் பதவி - டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல்!

சென்னை : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Sep 3, 2020, 1:43 PM IST

dmk
dmk

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்.03) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது. திமுக பொதுக்குழுக் கூட்டம் முதல்முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து முன்னதாகவே மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், வருகின்ற 9ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் மூன்று மணிக்கு திமுக பொருளாளராக உள்ள துரைமுருகன், திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.